மன்செஸ்டர் தாக்குதல் ஐரோப்பிய தேசியவாதத்தை மீண்டெழச் செய்யுமா?
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்
பிரித்தானியாவின் இசை அரங்கமான மான்செஸ்டரில் கடந்த 22 திகதி நடந்த தற்கொலைத் தாக்குகுதல் ஐரோப்பிய அரசியலில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட 119 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதன் பின்னர் பிரித்தானியாவிலும் ஏனைய அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளிலும் இத்தாக்குதல் கண்டிக்கப்பட்டதுடன் மாற்று உபாயம் பற்றிய உரையாடலை ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர். இத்தகைய தாக்குதல்களால் ஏற்படப்போகும் அரசியலைப் பற்றிய விபரணமாக இக்கட்டுரை அமையவுள்ளது.
1990 களில் ஹவாட் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பேராசிரியரான சாமுவேல் ஹன்டிங்டன் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக அரசியல் நாகரீகங்களுக்கிடையிலான மோதலாகவே அமையவுள்ளதென ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். பின்னர் அதனை முழுமையான ஆய்வு நோக்கத்துடன் நாகரீகங்களுக்கிடையிலான மோதல் (The Clash of Civilization) எனும் நூலை எழுதி பரபரப்பான அரசியலை படம் பிடித்துக் காட்டினார். அவரது நூலில் கிறிஸ்தவ நாகரீகம் முதலில் இலக்குவைத்துள்ள நாகரீகமாக இஸ்லாம் அமையும் என்றும் இரண்டுக்கும் இடையிலான மோதல் உலகம அதிர்ச்சியடையும் இரத்தம் தோய்ந்த அரசியலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். இந்த வரிசையில் மொங்கோலியரின் நாகரீகமும் இறுதியில் இந்து நாகரீகத்துடன் கிறிஸ்தவ நாகரீகம் மோதும் என்றும் எதிர்வுகூறலை முன்வைத்தார்.
சாமுவேல் ஹன்ரிங்டனின் சிந்தனைக்கும் மான்செஸ்டரின் தாக்குதலுக்கும் தொடர்புள்ளது போல் தோன்றுகிறது. காரணம் பிரித்தானிய உளவுத்துறை இத்தாக்குதலுக்கு பொறுப்பான சல்மான் அபேதியை இனங்கண்டுள்ளது. அதுமட்டுமன்றி இத்தாக்குதலுக்கு முன்னர் குண்டுதாரி தொலைபேசியில் உரையாடியதாகவும் குடும்பத்தினருக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இலண்டனில் அபேத்தியின் நண்பன் ஒருவர் கொலை செய்யப்பட்டதை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் இலண்டனில் அரேபியர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் யாரும் சீற்றம் கொள்ளவில்லை எனவும் அபேதி பல தடவை கேள்வி எழுப்பியுயள்ளதாகவும் அதுவே தற்கொலைத் தாக்குதலுக்கு காரணம் எனவும் அபேதியின் குடும்பம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு ஐஎஸ் உரிமை கோரியுள்ளது. பிரித்தானிய உளவுத்துறை பிரிட்டனில் 23 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. இதில் மூவாயிரம் பேர் உளவுத்துறையின் விசாரணைக்குள் உள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில் இரண்டு பிரதான விடயம் ஐரோப்பாவை கலக்கமடையவைத்துள்ளது. ஒன்று, இது ஒரு தற்கொலைத் தாக்குதலாகவுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியர்கள் போர்ள்த் துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் மீது நடத்திய தாக்குதலே முதல் தற்கொலைத் தாக்குதலாக பதிவாகியது. அதன் பின்பு ஈழவிடுதலைப் போராட்டத்தில் தற்கொலைத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. அதனை அராபிய தீவிரவாதினாள் பலஸ்தீனத்திலும் பின்பு ஈராக்கிலும் அதிகமாகப் பயன்படுத்தினர். ஆனால் மான்செஸ்டரின் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலானது ஐரோப்பாவின் எல்லைக்குள் நிகழ்ந்துள்ளது.
இரண்டாவது இதுவரை காலமும் அதாவது இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்து ஐரோப்பாவுக்கு வெளியே தாக்குதலை எதிர்கொண்டனர். முpகக் குறைந்த தாக்குதல்களைத் தவிர பாரிய விளைவுகளைத் தரக்கூடிய தாக்குதல்களை ஐரோப்பிய – அமெரிக்க கண்டத்திற்கு வெளியே எதிர்கொண்டன. எதிரிகளின் எல்லைகள் தம்மை நோக்கி வருவதற்கு முன்பே எதிரிகளின் எல்லைகளை நோக்கி ஐரோ-அமெரிக்கர்கள் நகர்ந்தனர். இதனால் அனைத்து யுத்தங்களும் ஐரோ-அமெரிக்காவுக்கு வெளியே நிகழ்ந்தது. செப்ரெம்பர் தாக்குதல் தவிர கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மட்டுமே ஐஎஸ் இன் தாக்குதல் பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனிவரை நகர்ந்துள்ளது.
பிரித்தானிய உளவுத்துறை கண்டறிந்த இன்னோர் தகவல் அபேதி லிபியாவை பூர்வமாகக் கொண்டவர் என்பதும் இலண்டனில் வாழ்ந்ததுடன் கல்லூரிப்படிப்பை இடையில் நிறுத்திக் கொண்டு தீவிரவாதத்தில் இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இத்தகைய விடயங்கள் மன்செஸ்டர் தாக்குதலின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. அதனை வெறுமையான உளத்தூண்டுதலால் மட்டும் நிகழ்ந்த தாக்குதல் என கணிப்பிடமுடியாது.
ஐரோப்பாவில் காணப்பட்டுள்ள நலன்பேணும் அரச (றநடகயசந ளவயவந) கொள்கையால் கவரப்பட்ட ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் அரசியல் அகதிகளுக்கு இத் தாக்குதல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தாராளப் பொருளாதாரப் பொறிமுறையானது அந்த நாடுகளில் தனிமனித சுதந்திரத்தையும், சட்ட ஒழுங்கையும் நியாயாதிக்கத்தையும் கொண்ட ஒரு அரசியல் பொருளாதார பொறிமுறையை முதன்மைப்படுத்திருக்கின்றன. அவற்றுக்கூடாக பொருளாதார செழிப்பும் அரசியல் உறுதிப்பாடும் சமூக எழுச்சி நிலைகளும் சாத்தியமான அரசியல் சமூகத்தின் இருப்பை ஐரோப்பியருக்கு ஏற்படுத்தியிருந்தது. அரச பாதுகாப்பின் எல்லைக்குள் அல்லது பிரஜைகள் அரசையும் அதன் கொள்கைகளையும் கவசமாகக் கொண்டு வாழ்ந்த அற்புதமான வாழ்க்கைக்கு தினம் தினம் நெருக்கடி ஏற்பட ஆரம்பித்துள்ளது.
தற்கொலைத் தாக்குதல் என்பது அபாயகரமான அச்சுறுத்தலையும் அமைதியின்மையும் ஏற்படுத்தக் கூடியதாகும். ஐரோப்பிய குழப்பமான சூழல் என்பது ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.2016 இல் 20 அக்டேபரில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பின்னர்மார்ச் 22 இல் வெஸ்ட்மிட்ஸ்ரரில் நிகழ்ந்தது. இவற்றை எல்லாம் கடந்த தாக்குதலாக இது அமைந்துள்ளது.
ஆசியா, ஆபிரிக்காவிலிருந்து அகதிகளாக அரசியல் தஞசம் போரும் பல இலட்சம் பேரின் வருகையால் ஐரோப்பா சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியாவின் அரசியல் குழப்பங்களுக்கும், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற்றமும், பிரிட்டனின் புதிய பிரதமராக தெரேசா மே தேர்ந்தெடுப்பதற்கும், பிரான்ஸ்ன் புதிய ஜனாதிபதியாக இமானுவல் மொர்கன் தெரிந்தெடுப்பதற்கும் பின்னால் அகதிகள் அரசியல் காரணமாகியது. ஏன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவுக்கு காரணமான அவரது அமெரிக்கா-அமெரிக்கருக்கு சொந்தம் சுலோகம் அதிகமான ஆதிக்கததை ஏற்படுத்தியது. இதில் பிரான்ஸ்ன் எதிர்தரப்பில் போட்டியிட்ட லீ பென் 33 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவை யாவற்றையும் நோக்கும் போது ஐரோப்பாவில் மீளவும் ஒரு தேசியவாத சிந்தனை தோற்றம் பெறுகிறது என்பதை உணரமுடிகிறது. உலகத்திற்கு புதியவற்றைத் தந்த ஐரோப்பா மீளவம் தனது புரதான பழமைக்குள் நகர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகிறதை காணமுடிகிறது. உலக மயவாக்கம் தந்த மிகப்பிரதான பலியிடலும் அதுவாகவே உள்ளது. உலகத்தை பூலோக மயப்படுத்தல் என்பதை பொருட்களாலும், உற்பத்தி சாதனங்களாலும், சக்திகளாலும் மட்டுமே அடையாளப்படுத்த ஐரோப்பா – அமெரிக்கா ஆட்சியாளர்கள்; விரும்பினார்கள். ஆனால் இயல்பான இயங்கியல் விதியானது உலகிலுள்ள அனைத்தையும் பூலோகமயப்படுத்தும் நிலைக்குள் தள்ளியள்ளது. அதில் ஒன்றாகக் காணப்பட்ட தற்கொலைத் தாக்குதல், தீவிரவாதத்தாக்குதல், பயங்கரவாதத்தாக்குதல் எதுவாயினும் அதனையும் பூகோளப்பரப்பில் எந்த கண்டத்தாலும் தவிர்த்துவிடவோ அல்லது ஒரு கண்டத்தை தனிமைப்படுத்தவோ இயங்கினால் விதி ஒருபோதும் விட்டுவைப்பதில்லை. இது தவிர்க்க முடியாத ஒர் அரசியலாகும்.
ஐரோப்பியா உலகம் பொதுமையானது எனக் கருதுபவர்களைக் கடந்து உலகிலுள்ள அனைத்தும் பொதுமையாகிக்கொண்டிருக்கிறது. எதனையும் பூலோகமயவாக்கம் விட்டுவைப்பதில்லை என்பதற்கு மான்செஸ்டர் தாக்குதல் எடுத்துக்காட்டாகும். ஐரோப்பியரது எஜமான் அடிமைத்தன அரசியலானது அவர்களின் கதவுகளை பதிலுறுக்க தலைப்பட்டுள்ளது. ஆனால் இதன் விளைவுகள் அபாயகரமானதாக அமையவுள்ளது.

ஐரோப்பியர்கள் தம்மை பாதுகாப்பதிலும் வலிமைப்படுத்துவதிலும் பின்னிக்காதவர்கள். அந்த வரைபுக்குள் சட்டத்தையும் அதன் வலிமையையும் அதிகப்படுத்துவது அவர்களது அடிப்படையான உத்தியாக அமையும். ஐரோப்பிய அரசுகளின் தயவில் செயல்படும் நலன் பேணும் திட்டங்களை பிற கண்டங்களிலும், அரசியல் சமூகங்கள் மத்தியிலும் கைவிடும் நிலை ஏற்படும். அமெரிக்கா, உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன குறைவிருத்தி நாடுகளுக்கு வழங்கும் உதவி நன்கொடைகள் சலுகைகள் கைவிட ஆரம்பித்தள்ளது.
ஐரோப்பிய யூனியனும் அத்தகைய அணுகுமுறைக்குள் இறங்கியுள்ளது. உதவிக்கு பதில் மனித உரிமைகள் என்ற உலக ஒழுங்கானது அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது போல் சலுகைகள் நிறுத்தப்பட வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு ஏற்படும் நெருக்கடிகள் பின்தங்கிய நாடுகளை மட்டுமல்ல அரசியல் தஞ்சம் கோரிய நாடுகளையம் நேரடியாப் பாதிப்பதுடன் மத நல்லிணக்கத்திற்கும், அரசியல் நல்லிணக்கத்திற்குமான நடவடிக்கைகள் பாதிப்படையும். இதனால் மெற்குலகத்தின் கண்கானிப்பும், கட்டுப்பாடும் தளரும் போது பின்தங்கிய நாடுகளில் நிலவும் மேலாதிக்க அரசியலும், ஆதிக்கப் போட்டிகளும் தவிர்க்க முடியாது நீடித்து நிலை பெற முயற்சிக்கும்.
மேற்குலகிற்கு இன்னோர் உத்தியும் கைவசம் உண்டு. அதாவது ஐஎஸ் மீதான தாக்குதலை ஐரோப்பாவிற்கு வெளியே நிகழ்த்துவது. காரணம் ஐஎஸ் இன் பின்தளம் முழுவதும் ஐரோப்பாவிற்க வெளியே காணப்படுகிறது. அத்தகைய பின்தளங்களும் ஐரோப்பாவுக்கு நகருமாயின் ஐஎஸ் வலு பல மடங்காகிவிடும். இதற்கான தயாரிப்பில் பிரித்தானியா – அமெரிக்காவுடன் கூட்டுச்சோந்துள்ளது. ஏற்கனவே ரஷ;சியா அமெரிக்க கூட்டு புலனாய்வுத் தகவல்களை பரிமாற்ற உடன்பட்டுள்ளன. அவ்வாறே அமெரிக்கா – பிரிட்டனும் செயல்ப்படுகின்றன. இது மேலும் விரிவடைய வாய்ப்புண்டு. காரணம் அமெரிக்கா தனித்து ஒரு போரை செய்வதற்கு தயங்குகிறது. இதனால் ஓரணியை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் தலைமையில் ஐஎஸ் எதிர்கொள்ள முனைகிறது. அமெரிக்கா தனித்தும் கூட்டாகவும் ஐஎஸ் எதிர்கொள்ளும் போது ஏற்படும் நெருக்கடியை கூட்டணி தீர்க்க வாய்ப்புண்டு. அதனால் ஐரோப்பாவிற்குள் தெளிவான கூட்டு ஒன்றுக்கான உரையாடலை மான்செஸ்டர் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.
இதில் பிரான்ஸ்ம் ஜேர்மனியும் தமக்குள் ஒத்துழைப்பினை ஏற்படுத்த முயன்று வருகின்றன. பெருமளவிற்கு பிரிட்டன் உட்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு முற்றிலும் வேறுபட்ட கொள்கையை பிரான்ஸ் – ஜேர்மனி கடைப்பிடிக்க விரும்புகின்றன. அதுவே பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மொர்க்கனின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அகதிகள் பற்றியும் ஐரோப்பிய தேசியம் பற்றிய அவரது கண்ணோட்டம் தனித்துவமானது. பிரான்ஸ் எப்போதும் அத்தகைய இயல்பினை பிரதிபலிக்கும் நாடு என்ற பெருமைக்குரியது.

மன்செஸ்டர் தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் ஒரு படி மேலான அச்சுறுத்தலைத் தந்துள்ளது. அதனால் ஐரோப்பா தனது கடந்த கால கொள்கைகள் அனைத்தையும் மீன்பரிசீலனைக்கு உள்ளாகும். அதில் சட்டம் ஒழுங்கு சார்ந்தும் நலன்பேண பொருளாதார கொள்ளைகள் பற்றிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. இதனால் ஐரோப்பா மீதான சீண்டல் பதில் தாக்குதலாக மட்டுமே அன்றி பல்வேறுபட்ட அம்சங்களுக்குள்ளால் சாத்தியப்படப் போகிறது.
எகிப்திலுள்ள செயின்ட் சாமவேல் தேவாலயத்திறங்கு பயணமான கிறிஸ்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 23 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். 10ற்கு மேற்பட்டவர் காயமடைந்தவர்கள் என்ற செய்தினாகது இஸ்லாம் – கிறிஸ்தவர்கள் யுத்தம் ஐஎஸ் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை உணரமுடிகிறது. காரணம் எகிப்தில் அதிகமாக ஐஎஸ்கள் குவிந்துள்ளதாயும் அல்யெசீரா உட்பட 21 செய்தி நிறுவனங்களை எகிப்த்து தடை செய்துள்ளது. எனவே ஐரோப்பா அல்லது கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் உலக அரசியல் – பொருளாதார – இராணுவ சமநிலையை மாற்றத்திற்கு உள்ளாக்கும் என்பது தவர்க்க முடியாத அரசியலாக உள்ளது.ஐரோப்பிய தேசியவாதம் நவீன மாற்றத்தை தந்தது என்பதற்கு பதில் அல்லது மாற்றீடு நோக்கி உலகத்தை நகர்த்த திட்டமிட்டுள்ளது என்பதே முடிவாக அமையவுள்ளது.




