செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்னும் மகுடத்திலான கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வு

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்னும் மகுடத்திலான கருத்தாய்வு நிலை கருத்துப்பகிர்வுறவாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் ஞானோதய மண்டபவத்தில்  இடம் பெற்றது.
குறித்த கருத்தாய்வு நிலை கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்விற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாமிப்பிள்ளை,திருகோணமலை மறைமாவட்ட ஆயர் றோயல் இம்மானுவேல்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்,கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் துரைராஜா சிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உற்பட மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,பொது நிலையினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த உயர் நிலைக் கருத்துரையாடலில் பிரதானமாக ஐந்து தலைப்புக்களில் துறைசார்ந்த நிபுணத்துவ கருத்தியலாளர்கள் ஆய்வியல் நோக்கில் கருத்தாடல் நிகழ்த்தினர்.
தொடர்ந்தும் அடக்கு முறைக்குட்படும்  இனத்திற்கு தூறலாகி விட்ட மனிதவுரிமை,தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய வகிபாகமும் அதன் நிலையியலும்,இராஜதந்திர நகர்வில் தமிழ்தேசியவாதம் நலிவுற்றதா?,குறுகிப்போகும் தமிழர் தாயகமும் குறையாத மேட்டிமைவாதமும்,’2009ம் ஆண்டிற்கு பிந்திய தமிழ் மென்சக்தியின்  நகர்வியல் ஆகிய தலைப்புகளில் ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்வு இடம் பெற்றது.
குறித்த கருத்தாடல்களை தொடர்ந்து அழைக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் உரை நிகழ்த்தியமை குறிப்பிபடத்தக்கது.bjj DSC_0054 DSC_0087 DSC_0111 DSC_0121
n10