செய்திகள்
மன்னாரில் மரமுந்திரிகையை ஊக்குவிக்க நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் மரமுந்திரிகையை உற்பத்திணை ஊக்குவிக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை ஆராயவென மரமுந்திரிகை கூட்டதாபனத்தின் தலைவர் தர்ம ஸ்ரீ பண்டார கருணாரெட்ண தiமையிலான குழு இன்று செவ்வாய்கிழமை(16) மன்னார் வருகை தந்திருந்தார்.
விசேடமாக மன்னார் மாவட்டம் உள்ளிட்ட கொண்டச்சி பிரதேசத்தில் மரமுந்திரிகை செய்கைக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியினை பார்வையிட்டு செய்யப்படவேண்டிய வேலை திட்டங்களை ஆய்வு செய்யவது இதன் நோக்கமாகும்.
இதன்படி மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டுள்ள குழு ஒரு நிகழ்வாக இம்மாதம் முதலம் திகதி மன்னார் குழந்தையேசுபுரம் பகுதியில் திறந்துவைக்கப்பட்ட மாவட்டத்தின் முதலாவது மரழுந்திரிகை பிராந்திய அலுவலகத்தினை பார்வையிட்டனர்
இந்நிகழ்வில் குறித்த கூட்டுத்தாபனத்தின் பிரதி தலைவர் பண்டார திலக மிரிகல, அதன் பொது முகாமையாளர் கீர்த்தி ஜெயகொடி, பிரதி பொது முகாமையாளர் வி.பி.கொடிகார, உதவி பொது மகாமையாளர். ஜி.வி.வி.சுரேந்திரா அதன் இயக்குனர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
n10





