செய்திகள்

மன்னாரில் மரமுந்திரிகை செய்கைக்கென 9000 ஏக்கர் ஒதுக்கீடு

மன்னார் மாவட்டத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ள திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக மன்னார் கொண்டச்சி பகுதியில் 9000 ஏக்கர் காணியில் மரமுந்திரிகை செய்கை பண்ண திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 1000 ஏக்கர் நிலபரப்பில் மரமுந்திரிகை செய்ககை பண்ண ஏற்ற நடவடிக்கையிணை தேசிய மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் மன்னார் பிராந்திய அலுவலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில்  விவசாயிகளுக்கு அவர்களது  சொந்த நிலங்களில் மானிய அடிப்படையில் மாவட்டத்தில் 550 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு மரமுந்திரிகை செய்கையை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
n10