செய்திகள்
மன்னாரில் ஹர்தால் :தனியார் பேருந்து சேவைகள் முடங்கின, நீதிமன்ற நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியாகிய ஹரிஸ்ணவி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை கண்டித்து மன்னாரில் இன்று புதன்கிழமை (24) ஹர்தால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மன்னார் தனியார் பஸ்சேவைகள் இன்று காலைமுதல் நடைபெறவில்லை. அதேபோன்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சேவைகள் வழமைபோல நடைபெற்றதுடன் வர்த்தக நிலையங்களும் வழமைபோல இயங்கியது குறிப்பிடத்தக்கது.
n10





