செய்திகள்

மன்னாரில் 32 ஆவது தேசிய திரி சாரணர் ஒன்றுகூடல்

32 ஆவது தேசிய திரி சாரணர் ஒன்று கூடல்  முதல் முறையாக மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
-மன்னார் தலைமன்னார் பிரதான வீதி லசார் சிறுவர் வளாக  மைதானத்தில் ஆராம்பமாகியுள்ள குறித்த மாநாட்டில் 21 மாவட்டங்களிலிருந்து 300 ற்கும் மேற்பட்ட திரி சாரணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-நேற்றைய தினம் வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்.குறித்த திரி சாராணர் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
DSC_0111 DSC_0119 DSC_0121 DSC_0123 DSC_0128 DSC_0133 DSC_0136
N5