மன்னார்-இலுப்பக்கடவை விபத்தில் இருவர் பலி! ஒருவர் கவலைக்கிடம்!
மன்னார்- இலுபக்கடவை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (19)நடைபெற்ற விபத்தில் இருவர் இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாவைக்கு மாற்றபட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இலுபக்கடவை பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் நடைபெற்றுள்ளது.
ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்தள்ளனர். மோட்டார் சைக்கிளை மிக வேகமாக ஓட்டி சென்றதினால் கட்டுபாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இந்நிலையில் ஊர் மக்கள் அவர்களை மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இலுப்பக்கடவையிலிருந்து மன்னார் கொண்டு செல்லம் வழியில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஜேம்ஸ் மேக்சி(23), சதாசிவம் கஜேந்திரன்(30) என அடையாளம்காணப்பட்டுள்ளனர். இதேவேளை மற்றையவர் ஆர். ரவிகுமார் இவர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.




