செய்திகள்
மன்னார் தமிழ் சங்கத்தில் அடி தடி-வெளியானது உண்மை.
மன்னார் தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்படவுள்ள வள்ளுவர் விழா தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடலில் குறித்த சங்கத்தின் செயலாளர் மற்றும் உப தலைவர் ஆகியோருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படவுள்ள வள்ளுவர் விழா தொடர்பான அவசர கலந்துரையாடல் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் கலையருவியில் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சிவசிறி தர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது எதிர்வரும் வள்ளுவர் விழாவினை மன்னார் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்து நடாத்துவது தொடர்பாக கலந்துரையால்கள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது மன்னார் தமிழ்ச்சங்கம் தொடர்பாக வெளியான தகவல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
குறிப்பாக அன்மையில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற சினிமா இன்னிசை நிகழ்வுக்கு மன்னார் தமிழ்ச்சம்கம் அனுசரனை வழங்கியதோடு மன்னார் தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட இலவச நுழைவுச்சீட்டுக்கள் குறித்த சங்கத்தின் சிலரினால் தனிப்பட்ட முறையில் பயண்படுத்தப்பட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் குறித்த சங்கத்தின் செயலாளருக்கும்,உப தலைவருக்கும் இடையில் வாக்குவதாம் இடம் பெற்ற நிலையில் அச்சம்பவம் கைகலப்பாக மாரியது.
உடனடியாக எனைய உறுப்பினர்கள் தலையிட்டு குறித்த பிரச்சினையினை சுமூகமான முறைக்கு கொண்டு வந்தனர்.
இது இவ்வாறிருக்க மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தர்போதைய நிலை குறித்து பலர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளனர்.
மன்னார் தமிழ்ச்சங்கம் மன்னார் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்ச்சங்க நிர்வாக கூட்டங்களுக்கு யாப்பின் அடிப்படையில் பிரதேச செயலாளர் மற்றும் கலாச்சார அலுவலகர் அல்லது வேறு எவரும் கலந்து கொள்ள அழைக்கப்படுவது இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
n10




