செய்திகள்

மன்னார் துரையம்மா அன்பகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மன்னார் துரையம்மா அன்பகத்தின் 9ஆம் ஆண்டு ஆரம்பத்தை முன்னிட்டு மடு பூ மலர்ந்தான் கிராமத்தைச் சேர்ந்த  23  வறிய மாணவர்களுக்கு    கல்விக்கான ஊக்குவிப்பு உதவி வழங்கல் நிகழ்வு நேற்று   ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.
மடு பூலர்ந்தான் கிராமத்தின் பொது மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற குறித்த நிகழ்வில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த 23 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை அதிபர்களின் அனுமதியுடன் பூமலந்தான் கிராமத்தில் 22 மாணவர்களும் மள்ளுவராயன் கட்டையடம்பன் பாடசாலையைச் சேர்ந்த  ஒரு மாணவியும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்களான பயிற்சிப் புத்தகம், சப்பாத்து,கொப்பிகள்,பாடசாலை புத்தகப்பை, கொம்பாஸ் உற்பட பல உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,சிறப்பு விருந்தினரர்களாக  மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி,மாந்தை மேற்கு பிரதேசச்  மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

n10

c x z