மன்னார் பிரதேச செயலாளரின் நடவடிக்கையால் விவசாயிகள் விசனம்
உயிலங்குளம் கல்மோட்டை புலவுக்காணி தொடர்பில் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக சந்தேகிப்பதாக உயிலங்குளம் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த புலவுகாணியை முறையற்ற வகையில் மன்னார் பிரதேச செயலாளரும், பிரதேச செயலக காணி உத்தியோகஸ்தரும் தனி நபருக்கு வழங்க ஏற்பாடுகள் செய்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக தெரியவருவது
உயிலங்குளம் கல்மோட்டை புலவுக்காணி கடந்த காலத்தில் சிறுபோக செய்கையின்போது விவசாயிகளுக்கு பங்கிடப்பட்டு வழங்கபட்டுள்ளது.
இந்நிலையில் உயிலங்குளம் கல்மோட்டை புலவுக்காணி முழுவதையும் கடந்த 2013ம் ஆண்டு நீர்பாசன திணைக்களம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வழங்கியுள்ளது.
அதன்படி 40 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த 40 ஏக்கரில் 10 ஏக்கர் புலவுகாணியை தனிநபர் ஒருவர் (யேசுதாசன் சுவாந்து) என்பவர் அத்துமீறி நுழைந்து நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
எனவே அதனை கண்டித்து புனித இராயப்பர் விவசாய அமைப்பு குழுவினால் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் திகதி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து மன்னார் பிரதேச செயலாளர் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி முதல் அதேவருடம் டிசம்பர் மாதம் 23ம் திகதிக்கு முன்னர் படிவம் ‘அ’ 1979ம் இலக்க அரச காணிகள் (ஆட்சி மீளப்பெறல் ) சட்டத்தின் பிரகாரம் 3(1) பிரிவின்படி அடாத்தாக பிடித்த குறித்த காணியினைவிட்டு வெளியேறும்படி குறித்த நபரை (சுவாந்து) என்பவரை கடிதம் மூலம் பணித்திருந்தார்
எனினும் அனுப்பிவைக்கப்பட்ட அவ்அறிவித்தலை மதிக்காது தொடர்ந்து அடாத்தாக நெற் பயிர் செய்கையில் ஈடுபட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தி அவரை குறித்த காணியில் இருந்து அகற்ற பிரதேச செயலாளரும்;, பிரதேச செயலக காணி உத்தியோகஸ்தரும் தவறியுள்ளதாக விவசாயிகள் சுட்டிகாட்டிகாட்டியுள்ளனர்.
ஆனால் தற்பொழுது அதிர்ச்சியூட்டும் வகையில் சட்டவிரோதமாக அடாத்தாக இருந்த நபர் உள்ளடங்கலாக ஏழுபேர் கடந்த 30 வருடங்களாக உயிலங்குளம்பகுதியில் உள்ள கல்மோட்டை பகுதியில் நெற்செய்கை செய்ததாகவும் 2005ம் ஆண்டு அவர்களோ குறித்த காணியை மாவட்ட விவசாய பண்ணை அமைப்பதற்கு விட்டுகொடுத்ததாகவும் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதுடன் சம்பந்தபட்ட காணியை அடாத்தாக பிடித்து நெற்செய்கை செய்து வரும் நபர்களுக்கே அதனை வழங்க வேண்டும் என மாகாண காணி ஆணையாளரிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்நடவடிக்கையில் மன்னார் பிரதேச செயலாளரும், காணி உத்தியோகஸ்தரும் தன்னிச்சையாக முடிவிணை எடுத்து தனியார் ஒருவருக்கு வழங்குவதற்கான நடவடிக்கையிணை மேற்கொண்டுள்ளதாக கவலையடைந்துள்ளனர்.
இச்செயற்பாடானது குறித்த காணி விடயத்தில் பாரிய ஊழல் நடந்திருக்கலாம் என விவசாயிகள் கருதுவதால் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்ட புலவுகாணியை மாவட்ட செயலகமே தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கும் விவசாயிகள் குறித்த காணியை விவசாய பணைக்கு வழங்கினால் விவசாயிகளுக்கு ஏற்புடையதாக அமையும் என தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலாளரும்,மாகாண காணி ஆணையாளரும் இதணை கருத்தில் கொண்டு ஏற்றநடவடிக்கையிணை எடுக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
n10




