மரணமடைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக தகவல்! திட்டமிட்ட கொலையா..?
கேரள மாநிலம் கொச்சியில் மரணமடைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
கலாபவன் மணி தனது இல்லத்தில் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை 10 மணியளவில் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 11 மணிமுதல் பொதுமக்கள் அஞ்சலிகாக அவரது உடல் வைக்கப்படுகிறது.
அவரது உடலுக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மலையாள திரைப்பட நட்சத்திரங்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஸ்கோபி உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கபுடுகிறது. அதன் தொடர்ச்சியாக மாலை 5 மணியளவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.
இதனிடையே மறைந்த கலாபவன்மணியின் உடலில் விஷம் கலந்திருந்ததாக அவரை சோதித்த மருத்துவர்கள் காவல்துறையிடம் கூறியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
N5




