மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை உயிருடன் பார்த்தபோது மனம் நெகிழ்ச்சி அடைந்தேன்
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை உயிருடன் பார்த்தபோது மனம் நெகிழ்ச்சி அடைந்தேன் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம், தேத்தாக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது,
தமிழக மீனவர்கள் ஐவருக்கு இலங்கை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்துத் தகவலறிந்த மத்திய பாஜக அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பயனால், அவர்கள் அத் தண்டனையிலிருந்து மட்டுமல்லாமல், சிறைத் தண்டனையிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் ஐந்து பேரையும், தற்போது வேதாரண்யத்தில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
ஈராக் அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்ட போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள மீனவர்களும், தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த போதகரும் மத்திய அரசின் வெளியுறவுத் துறை மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் விடுவிக்கப்பட்டனர்.
தலிபான் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்ட ஒருவரை உயிருடன் மீட்டிருப்பது இந்தியா மட்டும்தான்.
மத்தியில் பாஜக அரசுப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு நடவடிக்கை மூலமான மீனவர்களின் உயிரிழப்பு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மீனவர்களின் நலன் காக்கும் அரசு பாஜக அரசுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
n10




