செய்திகள்
மருந்து வகைகள் பலவற்றை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானம்
சிறுநீரக நோய் , இருதய நோய் , விசார் நாய்க்கடி மற்றும் சிறுவர் நோய்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக குறைந்தளவிலான விலைமனுக்கோரலினை கருத்திற்கொள்டு வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவினால் தொழில்நுட்ப மதிப்பீட்டு செயற்குழு அறிக்கையின் பரிந்துரையினை கருத்திற் கொண்டு குழந்தைகளின் நலன்கருதி டிப்திரியா, டெடனஸ், பர்டியுசிஸ், ஹெபடைசிஸ் B மற்றும் ஹீமோபியுலஸ், இன்பியுலன்சா வகை BP இன் ஒருங்கிணைந்த திரவ BP, USP அல்லது EP (பென்டமெலென்டா) டோஸ் 1,200,000 கொள்வனவு செய்யப்படவுள்ளது.
அத்துடன் க்ளோபிடொஜல், மாத்திரை மிலி கிராம் 75 இன் 120,000,000 மாத்திரைகள் , எனொக்சபாரின் சோடியம் தடுப்பூசி 6000 ஐயு/ மில்லிகிராம் 60/ மில்லி கிராம் 0.6 முன்கூட்டியே நிரப்பிய சிறிஞர் 580,000 , ரேபீஸ் தடுப்பூசி (மனித பயன்பாடு) 1 மி.லி × 0.5 மி.லி குப்பிகள் 300,000 ஹியுமன் அல்பியுமின் சொலியுசன் BP (விஎச் ஈயுஅர்) 20% மிலி லீட்டர் 50 போத்தல்கள் 80,000 ஆகியன கொள்வனவு செய்யப்படவுள்ளது.
n10




