மற்றவர்களை குறை பேசி திரிவதால் எந்த பயனும் இல்லை – சமந்தா
விஜய், விக்ரம், சூர்யா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை சமந்தா தற்போது, முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்க அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,
‘என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. சொந்த வாழ்க்கையும் விவாதத்துக்கு உள்ளாகிறது. இது வருத்தப்பட வைக்கும் விஷயங்கள். நாட்டில் நல்லவைகள் இருக்கின்றன. அதைப்பற்றி அதிகமாக பேசுவதுதான் வரவேற்க கூடியதாக இருக்கும். சிலர் மற்றவர்களை பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கேலி-கிண்டல் செய்வார்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவார்கள். இது மோசமான பழக்கம் ஆகும்.
இப்படிப்பட்டவர்களை எனக்கு அறவே பிடிக்காது. நிறைய நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. அதை தேடிக் கண்டுபிடித்து பேசலாம். மற்றவர்களை குறை பேசி திரிவதால் எந்த பயனும் இல்லை. நான் நல்லவைகளை மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்படி பேசுவதன் மூலம் நல்ல சிந்தனைகள் உருவாகும். ஒவ்வொருவரும் நல்ல விஷயங்களை பேசுவதன் மூலம் நல்ல நடத்தைகளில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் சமூக விரோத சம்பவங்கள் நடப்பது தவிர்க்கப்படும்.
நாம் ஒவ்வொருவரும் நல்ல விஷயங்களை பேசுவதற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
N5




