செய்திகள்

மற்றுமொரு தண்டப்பணம் அதிகரிக்கிறது : பஸ் பயணிகளே கவனம்

இ.போ.ச பஸ்களில் பயணசீட்டு இன்றி பயணிப்போர் மீதான தண்டப் பணத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆராய்ந்து வருகின்றது.
தற்போது இ.போ.ச பஸ்களில் பயணசீட்டு இன்றி பயணித்து பரிசோதகர்களிடம் மாட்டிக்கொண்டால் பயண தூரத்திற்கான கட்டணத்தின் இரண்டு மடங்கு கட்டணமும் அதனுடன் தண்டப் பணமாக 250 ரூபாவும் அறவிடப்படுகின்றது.
இந்நிலையில் இந்த 250 ரூபா தொகையை 1000ரூபாவாக அதிகரிப்பதற்காக யோசனையொன்று இலங்கை போக்குவரத்து சபையினால் போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.-(3)