செய்திகள்

மலையக எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

மலையக பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினரை அவர் சந்திக்கவுள்ளார்.

மலையக அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் காணி உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரமாளவில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-(3)