செய்திகள்
மலையக சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம்
பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மலையக சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பமாகவுள்ளது.
இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இந்த திரைப்படவிழா கொட்டகலை வெப்ஸ்டார் சர்வதேச பாடசாலையில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இங்கு பல்வேறு சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
நல்லதொரு சினிமா அனுபவத்தை அடைந்திட இவ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறது ஏற்பாட்டு குழு -(3)




