செய்திகள்

மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு ஆதரவு வழங்கி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

மலையகத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைரய நிறைவேற்றக் கோரியும் அவர்களது தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வவுனியாவில் பொது அமைப்புகளினால் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக ஆரம்பமான இவ் ஊர்வலம் ஏ9 வீதி வழியாக வந்து பிரதான பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன், அங்கிருந்து வவுனியா பசார் வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது.

மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதிக்கு வழங்கி வைப்பதற்கான மகஜரினை மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார அவர்களிடம் கையளித்தனர். இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கு, ஏமாற்றாதே ஏமாற்றதாதே தொழிலாளாகைள ஏமாற்றாதே, வெல்லட்டும் வெல்லட்டும் தோட்டத் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும், வெல்லட்டும் உரிமைக்கான போராட்டம், உழைப்பிற்கான போராட்டம்
வெல்லட்டும், வேலைகொடு வேலைகொடு, உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடு போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி. நடராஜ், உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_0363

IMG_0361

IMG_0358

IMG_0367

N5