மலையக தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக கொழும்பில் கூடிய இளைஞர்கள்
மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தியும் அவர்களுக்கும் சமஉரிமை அவசியம் என கோரியும் சர்வதேச தேயிலை தினத்தையொட்டி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று பகல் கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.
மலையக மண்ணுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் உயிர்நீத்தவர்கள் இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூரப்பட்டனர்.
மலையக சமூக ஆய்வு மையம், மலையக இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், மலையக உரிமைக் குரல் உட்பட மலையகம் சார்ந்த அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வை அருட்தந்தை மா. சத்திவேல் நெறிப்படுத்தினார். இதன்போது 12 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. -(3)





