மலையக மக்களுக்காக நினைவுத் தூபி
மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக நினைவுத்தூபி தலைமன்னாரில் நிறுவப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துவரப்பட்ட மக்களின் தடங்களை நினைவுகூருவதற்கும் வேர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் “வேர்களை மீட்டு உரிமை வென்றிட…” என்ற தொனிப்பொருளில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை ஜூலை 28 இலிருந்து ஆகஸ்ட் 12 வரையான நடைபயண ஆரம்ப நிகழ்வின்போது நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்துவதன் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது.
-(3)




