செய்திகள்
மலையக மக்களுக்கு காணி உரித்துடன் வீடு
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது.
இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படவுள்ளது