செய்திகள்

மலையாள திரையுலகிலும் அறிமுகமாகும் தமன்னா

ரத்தீஷ் அம்பாட் இயக்கும் ‘குமாரசம்பவம்’ மூலம் மலையாள திரையுலகில் நடிகை தமன்னா அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் தமன்னா, மலையாளத்தில் நல்ல கதைக்காக காத்திருந்த நிலையில், ரத்தீஷ் அம்பாட் இயக்கத்தில் உருவாகும் ‘குமாரசம்பவம்’ மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் திலீப் மற்றும் சித்தார்த் இருவரும் நாயகனாக நடிக்கின்ற நிலையில், சித்தார்த் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி கருத்து தெரிவித்த படக்குழு, ‘விரைவில் தமன்னா இப்படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். அவருக்கு மலையாளத்தில் சிறப்பான வாய்ப்பாக அமையும். மேலும், இப்படத்துக்கக சொந்த குரலில் டப்பிங் பேச வைக்கவும் முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் கேரளாவில் பிரபலமான கம்யூனிச கதாபாத்திரத்தை ஒட்டி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

N5