மஸ்கெலியாவில் பதற்றநிலை…
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வேண்டி 7வது நாளாக 02.09.2016 அன்றும் மலையக பெருந்தோட்ட பகுதிகளை அண்டிய நகரப்பகுதிகளில் ஆர்ப்பாட்டங்ள் நடைபெற்றது வருகின்றது.
அந்தவகையில் மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றினை மஸ்கெலியா பொலிஸார் நீதிமன்றத்தில் பெற்றுள்ளனர்.
பொது சொத்துகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் 8ற்கும் மேற்பட்ட முறைபாடுகளை முன்வைத்து இந்த தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இருந்தும் போராட்டம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் மஸ்கெலியா பொலிஸாரால் நகரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நகரத்தில் போராட்டத்தை முன்னெடுக்க வந்த தொழிலாளர்கள் நகரத்தில் குவிந்துள்ளனர். எனினும் இதுவரை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
அத்தோடு நடக்கவிருந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஸ்கெலியா நகரில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
N5

















