செய்திகள்
மஹிந்தவின் தோல்விக்கு பஸிலே காரணம் : குற்றஞ்சாட்டும் எஸ்.பி
மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு முழுக் காரணமும் அவரின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவே ஆகுமென சமூக நலன்புரிகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பெருந்தொகை நிதியை தேர்தலுக்காக வாரி வீசியதாகவும் இதன்போது மக்களுக்கும் வேண்டாமென கூறுமளவுக்கு பணத்தை அவர் வழங்கியதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது சகோதரனை வெற்றிப் பெறச் செய்வதாக கூறி பணத்தை வீணாக செலவழித்து மக்களை அதிருப்திக்குள்ளாக்கி அவரை தோற்கடித்துவிட்டதாகவும். ஆனால் தற்போது புதிய அணியினுடாக மஹிந்தவை வெற்றிப் பெறச் செய்வோம் என கூறி மீண்டும் அவரை தோற்கடிக்க அவர் முயற்சிப்பதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
n10




