செய்திகள்

மஹிந்தானந்தா அலுத்கமகே கைது

பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே சற்று முன்னர் சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பகுதியில் அவரால் அமைக்கப்பட்டுள்ள வீடொன்று தொடர்பாக விசாரணை நடத்தவென இன்று காலை சீ.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக கைது செய்யப்பட்டுள்ள அவர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். -(3)