செய்திகள்
மஹிந்த அணியிலிருந்து 8 பேர் அரசாங்கத்தில் இணைய திட்டம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 7 பேரும் மற்றும் இடதுசாரி கட்சியை சேர்ந்த ஒருவரும் அரசாங்கத்துடன் இணைவதற்காக அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அடுத்த வாரமளவில் ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
R-06




