செய்திகள்
மஹிந்த அரசாங்கத்தின் கடனால் சிக்கலுக்குள் தற்போதைய அரசாங்கம்
மஹிந்த ஆட்சிக்காலத்தில் வௌநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களில் 1146 பில்லியன் ரூபா மீளச் செலுத்தப்படவில்லையெனவும் இதனால் தற்போதைய அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கடன் தொகை தொடர்பாக அரசாங்கத்தின் கணக்குகளில் தெளிவாக குறிப்பிடப்படாமையினால் பல்வேறு சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அப்போதைய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ , பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ . பாதுகாப்பு செயலாளர் , ஜனாதிபதி செயலாளர் , மத்திய வங்கி ஆளுனர் ஆகியோரே பொறுப்பு கூற வேண்டுமென ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
n10




