மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டி : இன்று வேட்பு மனுவில் கையொப்பமிடுவார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவே தீர்மானித்துள்ளதாகவும் இதன்படி இன்று வியாழக்கிழமை வேட்பு மனுவில் கையொப்பமிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் வேட்பு மனுவில் அவர் கையொப்பமிட தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் காணப்பட்ட தமாதம் காரணமாக அவர் கையொப்பமிடும் நடவடிக்கையை ஒத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரமே போட்டியிட அனுமதிக்கப்படுவார் என முன்னர் செய்திகள் வெளியான போதும் அவர் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்குவார் என்றே நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




