செய்திகள்

மஹிந்த தன்னை பாதுகாத்துக்கொள்ளவே ஶ்ரீ.ல.சு.க தலைவர் பதவியை மைத்திரியிடம் ஒப்படைத்தார் : என்கிறார் அனுரகுமார

மஹிந்த ராஜபக்‌ஷ தமக்கு எதிரான குற்றச்சாட்களிலிருந்து தன்னை பாதுகாக்கும் நோக்கத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை பதவியை ஒப்படைத்திருந்ததாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுக்கும் மற்றும் அவரின் குடும்பத்திற்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள அவர் பல்வேறு உத்திகளை கையாண்டிருந்தார். அந்த வகையிலேயே மைத்திரி ஜனாதிபதியானவுடன் கட்சி தலைமை பதவியை அவரிடம் ஒப்படைத்தார். அதேபோன்று தனக்கு பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே எம்.பியாகினார். இப்போ பல்வேறு கூட்டங்களை நடத்துவதும் அந்த குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே ஆகும். என அனுரகுமார தெரிவித்துள்ளார்.
n10