செய்திகள்

மஹிந்த தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பாராம் : பஸில் கூறுகிறார்

விடுதலைப் புலிகளை தோற்கடித்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தறபோதைய அரசாங்கத்தை தோற்கடிப்பது என்பது பெரிய விடயமே அல்லவெனவும் எப்படியும் அவர் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பார் என முன்னாள் அமைச்சரான பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தெஹியோவிற்ற நகரில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த மக்களுக்கு தலைமை தாங்க முன்னாள் ஜனாதிபதி தயாராகவே இருக்கின்றார். தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும். விடுதலைப் புலிகளையே தோற்கடித்த அவருக்கு இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது என்பது சிக்கலான விடயமே அல்ல.  எப்படியும் தோற்கடிப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.