மஹிந்த நிழல் பிரதமரானார் : நிழல் அமைச்சரவை விபரங்கள் வருமாறு
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி நிழல் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதுடன் நிழல் வெளியுறவு அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி நிழல் அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் வருமாறு
நிதி – பந்துல குணவர்தன , வீடமைப்பு – விமல் வீரவன்ச , கல்வி – டளஸ் அழகப்பெரும , மாகாண சபைகள் – ரஞ்சித் சொய்சா , பெண்கள், சிறுவர் விவகாரம் – ஸ்ரீயானி விஜேவிக்கிரம , வெளியுறவுத்துறை – நாமல் ராஜபக்ஷ , துறைமுகம் – குமார வெல்கம , விமான சேவைகள், பெருந்தெருக்கள் – சமல் ராஜபக்ஷ , மின்சக்தி, எரிசக்தி – ரோஹித அபேகுணவர்தன , வனஜீவராசிகள் – விஜித பேரகொட , தபால் – எஸ்.சி. முத்துகுமாரன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடி இந்த நிழல் அமைச்சரவையை அமைத்துள்ளனர். அரசாங்கத்தின் அமைச்சுக்களின் செயற்பாடுகளை அந்தந்த விடயங்களுக்கு பொறுப்பான நிழல் அமைச்சர்கள் கண்கானிக்கவுள்ளனர்.




