மாகண சபை தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்-தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை!
மாகண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதியில்லை என்றால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
-(3)




