செய்திகள்

மாகாண சபையிலும் எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்படவில்லை: சி.வி.கே.சிவஞானம்

சில சபைகளில் உறுப்பினர்கள் தாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என வெளியே காட்டிக் கொண்டாலும் அவர்களிடையே உள்ளுக்குள் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.அவற்றைப் பூசி மெழுகி அமைதியாகவிருப்பது போல வெளியில் காட்டிக் கொள்கிறார்கள்.மாகசாண சபையிலும் எல்லோரும் ஒற்றுமையாகவிருக்கின்றார்கள் என நான் கூற மாட்டேன் எனத் தெரிவித்தார் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

யாழ்.சுன்னாகம் பொது நூலகத்தின் பொன்விழா நிகழ்வும் மலர் வெளியீடும் அண்மையில் பொதுநூலக முன்றலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து  கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி சபைகள் பலவும் தற்போது கோமாளித்தனமாகச் செயற்படுகின்றன.உறுப்பினர்களிடம் ஒற்றுமை என்பது கிடையாது.எதிர்வரும் யூலை 30 ஆம் திகதி இச் சபைகளின் கால எல்லை முடிவடைகிறது.எப்படியும் அடுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரிக்குப் பின்னர் தான்.அந்த இடைக்காலப் பகுதியில் மக்களுக்கு எப்படிச் சேவை செய்யலாம்?அவர்களுக்கு எவ்வாறான உதவிகளை வழங்கலாம் எனத் தங்களைப் புடம் போட்டுக் கொண்டு சபை உறுப்பினர்கள் மீளவும் வர வேண்டும்.

என்ன தான் தொழில்நுட்ப வளர்ச்சி,விஞ்ஞான வளர்ச்சி,கணனி யுகம் என எம்மிடையே இருந்தாலும் உசாத்துணை எனும் போது அதற்கு நூலகத்தைத் தான் நாங்கள் நாட வேண்டும்.நூலகங்கள் எமது அறிவு வளர்ச்சியை மேம்படச் செய்கின்றன.நூலகங்களினால் பல அறிஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.

1960 ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் சுன்னாகம் பொதுநூலகத்தைப் பின்பற்றிப் பல நூலகங்கள் உருவாக்கம் பெற்றன. இந் நூலகம் இன்று வளர்ச்சி பெற்றுப் பொன்விழா கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

19011_1138291406197579_5940083156276114321_n