மாகாண சபை உறுப்பினர்கள் சுற்றுலா செல்ல வேண்டுமாயின் திறைசேரியின் அனுமதியை பெற வேண்டும்
மாகாண சபை உறுப்பினர்கள் கல்வி சுற்றுலா நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமாயின் அது தொடர்பாக அவர்கள் திறைசேரியின் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினால் விடுக்கப்பபட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை காணப்படும் அனைத்து மாகாணங்களில் கடந்த 20 வருடங்களுக்கு அதிகமாக பலர் அரச நிதியின் மூலம் கல்வி சுற்றுலா சென்று வருகின்றனர்.ஆனால் இந்த வருடம் முதல் அதற்கு அவர்கள் திறைசேரியின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் 58 பேர் ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்தே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். -(3)




