மாணவன் செலுத்தி வந்த மோட்டார்ச் சைக்கிள் மோதியதில் குடும்பப் பெண் படுகாயம்: குப்பிளானில் சம்பவம்
பாடசாலையொன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் செலுத்தி வந்த மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து மோதியதில் குடும்பப் பெண்ணொருவர் படுகாயங்களுக்குள்ளான சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்மணி நோயாளரொருவர் ஒருவரைப் பார்த்து விட்டு தனது வீடு நோக்கி குப்பிளான்-குரும்பசிட்டி விதியால் நடந்து வந்து கொண்டிருந்த போதே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்மணி உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தற்போது அங்கு சிகிச்சை பெற்ற வருகிறார்.
மேற்படி விபத்தில் குப்பிளான் தெற்கு கேணியடியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான திருமதி.நேசராணி கணேசலிங்கம் என்பவரே காலில் பாடுகாயமடைந்தவராவார். யாழ்.நகர் நிருபர்-




