மாணவர்களை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட போதைத்தூள் குப்பிகள் சுங்கத்தால் விடுவிப்பு
பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மருந்து பொருட்கள் போன்று கொண்டு வரப்பட்ட நிகோட்டின் கலந்த புகையிலைத்தூள் குப்பிகள் சுங்கத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறாக 75000ற்கும் அதிக குப்பிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015இல் கொண்டுவரப்பட்ட போது சுங்கத்தினால் விடுவிக்கப்படாது குறித்த குப்பிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை இறக்குமதி செய்தவர்கள் அதிகாரிகளின் உதவியுடன் அதனை விடுவித்துள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
N5




