மாணவி ஹரிஸ்ணவி கொலை சந்தேக நபருக்கு மார்ச் 14 வரை விளக்கமறியல்!
வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 35 வயது குடும்பஸ்தரான சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி 14 வயது மாணவி ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் நேற்றைய தினம் அயல் வீட்டுக்காரரான குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
இன்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதன்போது, சந்தேக நபரை நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட போது நீதிமன்றம் முன்னால் இளைஞர்கள் ஓன்று கூடியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியது.
N5





