செய்திகள்

மாநாட்டுக்கு செல்லாதிருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானம் : 39 எம்.பிக்களும் உள்ளடக்கம்

குருநாகலில் நாளை 4ஆம் திகதி நடைபெறவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை எம்.பிக்கள் யாரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 39 எம்.பிக்களும் அந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்துக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)