செய்திகள்

மாநாட்டுக்கு வருகை தராதவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படாது

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்ளாத கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படாது என கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கட்சி மாநாட்டு காலப்பகுதியில் மகிந்த ராஜபக்‌ஷ வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருந்தமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.  -(3)