மாரியப்பன் தங்கவேலு கதையை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறாரா?
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இந்தியர் மாரியப்பன் தங்கவேலு. இவர் சேலம் மாவட்டத்தில் பெரியவடக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது வாழ்கை வரலாறை படமாக எடுக்கவுள்ளார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
தனது 5 வயதில் விபத்து ஒன்றில் காலை இழந்து இயலாமை காரணமாக சோர்ந்து கிடந்த மாரியப்பன் தங்கவேலு விடாமுயற்சியால் பல இன்னல்களை கடந்து பாரலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
இவரது வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படமாக எடுக்கவுள்ளார். இன்று புத்தாண்டை முன்னிட்டு படத்தை வெளியிட்டுள்ளார்.
N5




