செய்திகள்

மாலைதீவு அரசை கவிழ்க்க சதி: இரகசியமாக இலங்கை வந்த நஷீட் மந்திராலோசனை

இரகசியமான முறையில் கொழும்பு வந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமத் நஷீட், மாலைதீவின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவது தொடர்பில் இலங்கையிலுள்ள தன்னுடைய ஆதரவாளர்களுடன் மந்திராலோசனை நடத்திவருவதாகத் தெரியவந்திருக்கின்றது.

மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி யமீனை எவ்வாறு ‘சட்டரீதியான வழிமுறைகள்’ மூலம் ஆட்சியிலிருந்து அகற்ற முடியும் என தனக்கு நம்பிக்கையானவர்களுடன் அவர் கொழும்பில் ஆலோசனைகளை நடத்திவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நஷீட்டின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பான செய்தி கசிந்ததையடுத்து மாலைதீவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாகப் பலப்படுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

யமீனின் ஆட்சியில் நஷீட் கைதாக தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சகிச்சைக்காக லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். அங்கு அரசியல் அடைக்கலம் கோரிய அவர், இப்போது எவ்வாறு இலங்கைக்குள் வந்தார் என்பதையிட்டு எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
-06