செய்திகள்
மாவீரர் தினத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அணி திரண்ட மக்கள்
கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று மாலை மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர்.
அந்தவகையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று மாலை 6 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் தீச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள் தீபம் ஏற்றி வைத்தனர்.
பின்னர் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள். -(3)





