செய்திகள்

மித்தெனியவில் மீட்கப்பட்டது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இராசயனப்பொருள் என உறுதி!

மித்தெனிய தொரயாய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இராசயனப்பொருள் என்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மீட்கப்பட்ட 20 இரசாயன மாதிரிகளில் 17மாதிரிகள் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.