செய்திகள்

மினுவாங்கொடையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு

மினுவாங்கொடையில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தந்தை மற்றும் இரண்டு மகன்களே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.*(15)