செய்திகள்

மினுவாங்கொட கொரோனா தொற்று உறுதியானோருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் பல பணியாளர்களுக்கு இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2222 ஆக அதிகரித்துள்ளது.இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை மினுவாங்கொட பிரண்டிக்ஸ் தொழிற்சாலையின் 35 பணியாளர்களும் அவர்களின் நெருங்கி பழகிய 25 பேருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாவர்.(15)