மின்சாரத்தை சிக்கனப்படுத்த உதவுங்கள் : தனியார் நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்விளக்குகளுக்கான மின் பாவனையை கட்டுப்படுத்தி மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வறட்சியுடன் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால், தற்போதிருந்தே மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தமது பிரச்சார செயற்பாடுகளுக்காக பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் விளம்பரப் பலகைகள் அலங்காரமின் கட்டமைப்புகளுக்காக பெருமளவு மின்சாரம் செலவிடப்படுகிறது. அதனை மட்டுப்படுத்துவதன் மூலம் கணிசமானளவு மின்சாரத்தை சேமிக்க முடியும். வறட்சி நீங்கும்வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் திட்டத்துக்கு வழங்கும் ஒத்துழைப்பாக இந்த செயற்பாட்டை பின்பற்றுமாறு அனைவரிடமும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். -(3)




