செய்திகள்
மின் கட்டணம் அதிகரிக்கப்படாது : நிதி அமைச்சர்
மின் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன் கருதி மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் செலுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




