செய்திகள்

மீண்டுமொரு சிங்கள – முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றதாம் : பந்துல வெளியிடும் தகவல்

மீண்டுமொரு சிங்கள முஸ்லிம் கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடமளிக்க கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1915ஆம் ஆண்டு நாட்டில் பாரிய கலவரமொன்று நடந்தது. தற்போது சரியாக 100 வருடத்தின் பின்னர் அதேபோன்று மற்றுமொரு கலவரத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு இடமளிக்க கூடாது. அவர்கள் இவ்வாறான கலவரத்தை ஏற்படுத்தி ஏதோவொன்றை அடைய முயற்சிக்கின்றார்கள். என அவர் தெரிவித்துள்ளார். -(3)