மீண்டும் வருகிறது “முனி” பேய்
முனி படத்தின் வெற்றிக்கு பிறகு, பேய் படங்களை மட்டுமே எடுப்பேன் என முடிவெடுத்துவிட்டார் ராகவா லாரன்ஸ். அந்த படத்தின் அடுத்த பகுதிகளாக வெளிவந்த காஞ்சனா, காஞ்சனா-2 ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது “நாகா” என்ற பெயரில் நான்காவது படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் ‘முனி’யாக நடித்த ராஜ்கிரனை மீண்டும் நடிக்கவைக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.
ஒன்பது வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைவதால் ‘நாகாவிற்கு’ எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இந்த படம், ராகவா லாரன்ஸ் “மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தை முடித்த பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
N5




