மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையும் மடோனா செபஸ்டியான்
‘அனேகன்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் டி.ராஜேந்தர், விஜய் சேதுபதியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி தேடுதல் வேட்டையை கடந்த சில நாட்களாக படக்குழுவினர் முடுக்கி விட்டிருந்தனர்.
கடைசியாக, மலையாளத்தில் வெளிவந்த பிரேமம், தமிழில் வெளிவந்த காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்த மடோனா செபஸ்டியானை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய் சேதுபதியுடன் மடோனா செபஸ்டியான் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர். ஜூலை மாதம் படப்பிடிப்பை துவங்க இருக்கும் நிலையில், மற்ற நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
N5




